மின்சாரம் தாக்கி கடை உரிமையாளர் சாவு

மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி கடை உரிமையாளர் உயிரிழந்தாா்.

Update: 2023-07-10 19:00 GMT

மயிலாடுதுறை;

மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி கடை உரிமையாளர் உயிரிழந்தாா்.

மின் விளக்கை கழற்றினாா்

மயிலாடுதுறை டவுன் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் ராமாராம். இவருடைய மகன் தேவாராம்(வயது40). இவர் அதே பகுதியில் பெண்களுக்கான அணிகலன்கள் விற்பனை செய்யப்படும் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு தேவாராம் கடையை பூட்டுவதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்ேபாது கடையின் வாசலில் இருந்த மின்விளக்கை கழற்றிய போது எதிர்பாராத விதமாக தேவாராம் மீது மின்சாரம் பாய்ந்தது.

பரிதாப சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தேவாராம் மின்சாரம் தாக்கி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தேவாராமின் சகோதரர் கருணாராம் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்