மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கும்பகோணம் அருகே ஓட்டலில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.;
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே ஓட்டலில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கியது
கும்பகோணம் அருகே உள்ள மாதுளம் பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்த சிலம்பரசன். இவருைடய மகன் பரணிதரன் (வயது30). இவர் மேம்பாலம் இறக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் பரணிதரன் ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விசாரணை
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.