நாளை முதல் 23-ந்தேதி வரை மின்நிறுத்தம்
அதிராம்பட்டினத்தில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் 23-ந்தேதி வரை அவ்வப்போது மின்நிறுத்தம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
பட்டுக்கோட்டை;
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பட்டுக்கோட்டை நகர் உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அதிராம்பட்டினம் நகரத்தில் நெடுஞ்சாலைத் துறை பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை(திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேவையான நேரங்களில் மட்டும் அவ்வப்போது மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.