லாரி மோதி மின் கம்பம் சேதம்

சுவாமிமலை அருகே லாரி மோதி மின் கம்பம் சேதமடைந்தது

Update: 2022-09-24 20:30 GMT

கபிஸ்தலம்;

திருச்சி மாவட்டம் கைலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் தனராசு(வயது55). இவர் தனக்கு சொந்தமான கனரக லாரியில் திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு கம்பி ஏற்றி சென்றாா். காரைக்காலில் கம்பியை இறக்கிவிட்டு அங்கிருந்து மீண்டும் திருச்சி நோக்கி சுவாமிமலை வழியாக லாரி வந்த போது எதிர்பாராத விதமாக பாபுராஜபுரம் மெயின் ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் இந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த சுவாமிமலை போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்