சரவணம்பட்டி
கோவை சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு தேவையம்பாளையம் கிழக்கு வீதியில் சுமார் 10 ஆண்டுகளாக சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், மின் கம்பத்தை சாலையோரத்தில் வைக்கவும், தொடர்ந்து சாலையை சீரமைக்கவும் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மின்கம்பம் சாலையின் நடுவிலேயே உள்ளது. இதனால் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. ஆகவே அதிகாரிகள், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.