மின் மோட்டார் திருட்டு; கடைக்காரர் கைது

மூலைக்கரைப்பட்டியில் மின் மோட்டார் திருட்டு தொடர்பாக பழைய இரும்பு கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-29 18:45 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் குருநாதன் (வயது 42). மோட்டார் மெக்கானிக். இவரது வீட்டில் வேலைக்கு வந்த மின்மோட்டாரை சம்பவத்தன்று சிறுவர்கள் சிலர் மூலைக்கரைப்பட்டியில் உள்ள பழைய இரும்புக்கடை நடத்தி வரும் ராசையா மகன் மரியதாஸ் (வயது 38) என்பவரது கடையில் பழைய இரும்புக்கு விற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கடைக்காரர் மரியதாசை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்