ஆழ்குழாய் கிணறு மின் மோட்டார்-குழாய்களுக்கு தீ வைப்பு
பேராவூரணி அருகே ஆழ்குழாய் கிணறு மோட்டார் மற்றும் குழாய்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்ததாக போலீசில் விவசாயி புகார் தெரிவித்துள்ளார்.
பேராவூரணி:
பேராவூரணி அருகே ஆழ்குழாய் கிணறு மோட்டார் மற்றும் குழாய்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்ததாக போலீசில் விவசாயி புகார் தெரிவித்துள்ார்.
விவசாயி
பேராவூரணி அருகே உள்ள பழையநகரம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது55). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அரசலங்கரம்பை கிராமத்தில் உள்ளது.
இதில் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக 400 அடியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் மின் மோட்டார் பொருத்தி விவசாயம் செய்து வருகிறார்.
ஆழ்குழாய் கிணறு மோட்டாருக்கு தீவைப்பு
வழக்கம் போல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு நேற்று முன்தினம் மாலை மின்மோட்டாரை அணைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். இதை தொடர்ந்து அவர், நேற்று காலை வயலுக்கு சென்று பார்த்த போது ஆழ்குழாய் கிணற்றில் இருந்து பிளாஸ்டிக் குழாய்களை அகற்றிவிட்டு தண்ணீர் வெளியேற்றும் குழாயை சேதப்படுத்தி, ஆழ்குழாய் கிணற்றை சணல் சாக்கால் சுற்றி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் இருந்தது.
இதில் மின் மோட்டார் மற்றும் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்து இந்தது. இதன் சேதமதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மதியழகன் பேராவூரணி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.