மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
பட்டுக்கோட்டையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார்.கூட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி தீர்வு பெறலாம்.இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பட்டுக்கோட்டை செயற்பொறியாளர் மாறன் தெரிவித்துள்ளார்.