மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடம், தேதி விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2023-06-01 18:45 GMT

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மாதம்தோறும் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான (ஜூன்) கூட்டம் நடத்தப்பட உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 6-ந்தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 9-ந்தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 13-ந்தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 16-ந்தேதி நெல்லை நகர்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 20-ந்தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும் 27-ந்தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்