மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இந்த மாதத்துக்கான (மார்ச்) மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடம், தேதி விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.;
தென்காசி. நெல்லை மாவட்டங்களில் இந்த மாதத்துக்கான (மார்ச்) மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 7-ந்தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 10-ந்தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 14-ந்தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 17-ந்தேதி நெல்லை நகர்ப்புற கோட்ட அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு தொடங்கி நடக்கிறது. அதேபோல் தென்காசி கோட்ட அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதியும், கடையநல்லூர் கோட்ட அலுவலகத்தில் 24-ந்தேதியும், கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் 28-ந்தேதியும் காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் மின்நுகர்வோர் கலந்து கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி தெரிவித்து உள்ளார்.