மின் கட்டண உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-23 17:57 GMT

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.எஸ்.ஜி. சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.

மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, தமிழக அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட பார்வையாளர் முனிராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோட்டீஸ்வரன், தர்மலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி தலைவர் ரவி, மாவட்ட மகளிர் அணி தலைவி விமலா குமார்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்