வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் திருத்த ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் திருத்த ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-12-19 17:56 GMT

ராணிப்பேட்டையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் திருத்த ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.1.2023-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விளம்பரம் செய்ய வேண்டும், அயல்நாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிப்பது, இறந்தவர்கள் பெயர்களை நீக்கம் செய்வது குறித்து அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.

கலெக்டர்

அவர்களின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பதிலளித்து பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட பிற்படுபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் முரளி, வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, தேர்தல் தாசில்தார் ஜெயக்குமார், அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்