வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது.

Update: 2022-11-27 19:18 GMT

சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற உத்தரவிட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் கடந்த 12-ந்தேதி மற்றும் 13-ந்தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 2-ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நேற்றுமுன்தினம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

18 வயது பூர்த்தியடைந்துள்ள...

இந்நிலையில் நேற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது. அதன்படி கரூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கரூர் நகர்மன்ற உயர்நிலைப்பள்ளி, கரூர் குமரன் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது. இந்த முகாம்களில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம், திருத்தத்திற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் அளித்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் உதவிபுரிந்தனர். இதேபோல் தோகைமலை, நொய்யல், வேலாயுதம்பாைளயம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்