வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடைபெற்றது.

Update: 2022-11-27 18:45 GMT


கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு பார்வையாளராக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக இயக்குனர் சிவசண்முக ராஜா கலந்துகொண்டார். மேலும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டனர். கோவை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 14 ஆயிரத்து 962 ஆகும். தற்போது நடைபெற்று வரும் சிறப்பு முகாம்கள் வருகிற 8-ந்தேதிவரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பிரமுகர் வக்கீல் ராஜேந்திரன், சிறப்பு பார்வையாளரிடம் கூறும்போது, "வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது. அவற்றை நீக்குவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த பார்வையாளர், உரிய ஆவணங்களுடன் ஆன்லைனிலோ அல்லது முகாமிலோ விண்ணப்பித்தால் இறந்தவர்களின் பெயர்கள் உடனடியாக நீக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த முகாமில் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி சிவக்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், கோட்டாட்சியர்கள் பூமா, பண்டரிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கோவை புலியகுளம் அரசு கலைக்கல்லூரி, நிர்மலா கல்லூரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்