ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்தல்; கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் தோ்தல் வருகிற 20-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-23 18:22 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டபிள்யூ.ஆர்.சி.பி. திட்டத்தில் உள்ள ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 20-ந்் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனுக்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வழங்கப்படும்.

வருகிற 1-ந் தேதி முதல் வேட்பு மனுக்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படும். 8-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேட்புமனுக்களின் பட்டியல் வெளியிடப்படும்.‌ மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். 4 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 20-ந் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 4 மணி முதல் வாக்கு எண்ணுதல் மற்றும் முடிவுகள் அறிவிக்கும் பணி நடைபெறும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்