திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்

திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-09-30 07:37 GMT

சென்னை,

திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த 28-ம் தேதி அறிவித்தார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்றும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக பொதுக்குழு கூட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பதவிகளுக்கு வரும் 7-ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்