"தேர்தல் ஆணைய கடிதம் - தற்காலிக முடிவு" - ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-04-20 14:18 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏல்க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் உத்தரவு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"தேர்தல் ஆணையம் கொடுத்த ஒப்புதல் கர்நாடக தேர்தலுக்கான தற்காலிக முடிவு தான். தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்ததாக கருத முடியாது. தேர்தல் ஆணையம் வழங்கிய ஒப்புதல் நீதிமன்ற முடிவுக்கு உட்பட்டது. ஒருவரை நீக்க வேண்டுமானால் முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்று கூறினார்.



Full View


Tags:    

மேலும் செய்திகள்