அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து உள்ளது.

Update: 2022-07-30 08:50 GMT



புதுடெல்லி,



நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த கூட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து உள்ளது. இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் தமிழக மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்