மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல்

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.

Update: 2023-05-02 18:45 GMT

சிவகங்கை

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியல்

சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வரைவுவாக்காளா் பட்டியலினை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட அதை உள்ளாட்சி அதிகாரிகள் பெற்று கொண்டனர். பின்னர் கலெக்டர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு மொத்தம் 12 பேர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் மாவட்ட ஊராட்சியில் இருந்து 9 பேரும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து 3 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தேர்தலில் வாக்களிக்க 300 தகுதியான வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 16 பேரும், நகராட்சிகளின் வார்டு உறுப்பினர்களில் 117 வாக்காளர்களும், 11 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்களில் 167 வாக்காளர்களும் உள்ளனர். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்படும்.

இறுதிபட்டியல்

தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தோ்தலுக்கான வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும மாவட்ட கலெக்டரிடம் இன்று(புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்குள் தெரிவிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் நாளை(வியாழக்கிழமை) வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், மாவட்ட ஊராட்சி செயலர் பழனிசாமி, மேலாளர் (வளர்ச்சி) திருப்பதிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்