நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 11 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல்

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 11 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

Update: 2022-07-08 17:03 GMT

நாமக்கல்:

காலி பதவிகள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 16 பதவிகள் காலியாக இருந்தன. அந்த பதவிகளுக்கு கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதில் இளநகர், மாவுரெட்டிப்பட்டி, சிறுநல்லிக்கோயில், செருக்கலை மற்றும் சிறுமொளசி ஆகிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒரு வேட்பு மனு மட்டுமே வரப்பெற்றது.

அதனால் அந்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர். இதனிடையே மீதமுள்ள 11 பதவிகளுக்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அதில் 34 பேர் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பெட்டி

இதையொட்டி நேற்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு பெட்டிகள் உள்பட 72 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக அவை அனைத்தும் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கதிராநல்லூர் ஊராட்சியில் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

அதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மண்டல அலுவலருமான லோக மணிகண்டனிடம் வாக்குப்பதிவு பெட்டிகள் உள்பட அனைத்து பொருட்களையும் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து அவை அனைத்தும் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டு தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்