விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

மூன்றடைப்பு அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-10 20:54 GMT

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகில் உள்ள முதலைகுளம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் ராஜ புஷ்பம் (வயது 60). இவரது கணவர் 20 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனியாக வீட்டில் வசித்து, கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அடிக்கடி வயிற்று வலி பிரச்சினையாலும், பிள்ளைகள் சரியாக கவனிக்காததாலும் மனவிரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை உடனடியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபுஷ்பம் உயிரிழந்தார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்