விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-03-15 18:45 GMT


சின்னசேலம், 

சின்னசேலம் அடுத்த பங்காரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி மனைவி அய்யம்மாள் (வயது 59). பங்காரத்தில் அவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்த அய்யம்மாள், மனமுடைந்து விஷத்தை குடித்தார். இதையடுத்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்