போடிமெட்டு மலைப்பாதையில் 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே புதர்மண்டிய பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாா்த்து குரங்கணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர், போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த காமாட்சி (வயது 63) என்பதும், நோய் பாதிப்பால் அவதியடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.