முதியவர் தற்கொலை

தேனியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-07-24 12:33 GMT

தேனி விஸ்வதாஸ் நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 66). கூலித்தொழிலாளி. இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகாத விரக்தியில் கடந்த 22-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்