நாகர்கோவில்:
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 65). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி கோட்டார் போலீசுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாா் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சந்திரசேகரன் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்றும் குணமடையாததால் தற்கொலை செய்ததாகவும் தெரிய வந்தது.