விஷம் குடித்து முதியவர் தற்கொலை

பாவூர்சத்திரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-06-11 13:33 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர் அய்யனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேர்மக்கனி (வயது 72). இவருக்கு நீண்ட நாட்களாக நீரிழிவு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மனவேதனையில் இருந்து வந்த சேர்மக்கனி சம்பவத்தன்று இரவு பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேர்மக்கனி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்