கால்வாய் பாலத்தில் தத்தளித்த முதியவர் மீட்பு
கால்வாய் பாலத்தில் தத்தளித்த முதியவர் மீட்கப்பட்டார்.;
திருப்புவனம்,
திருப்புவனம் அடுத்த மணலூர் கிராமத்தில் மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பெரிய மேம்பாலம் உள்ளது. கீழே கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் வைகை ஆற்று தண்ணீர் அதிகமாக செல்கிறது. நேற்று கால்வாயில் உள்ள பள்ளத்தில் சுமார் 62 வயது மதிக்கத்தக்க முதியவர் ஏற முடியாமல் தத்தளித்தார். அப்போது அங்கு வந்த புலியூரை சேர்ந்த மாரிக்கண்ணு, கொத்தங்குளத்தை சேர்ந்த தென்னரசு ஆகிய வாலிபர்கள் தண்ணீரில் குதித்து முதியவரை காப்பாற்றினர். விசாரணையில் அவர் வேலூரை சேர்ந்த நாராயணன் என்பதும், ராமேசுவரம் செல்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து திருப்புவனம் போலீசார் முதியவரை ஆம்னி கார் மூலம் ராமேசுவரத்துக்கு அனுப்பி வைத்தனர்.