கார் மோதி முதியவர் பலி

காரியாபட்டி அருகே கார் மோதி முதியவர் பலியானார்.

Update: 2022-06-01 19:17 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி கே. செவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 60). இவர் தனது தோட்டத்தில் விளைந்த மல்லிகை பூக்களை எடுத்துக் கொண்டு காரியாபட்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு கார் திடீரென மகாலிங்கம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகாலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்