பஸ் மோதி முதியவர் பலி

பஸ் மோதி முதியவர் பலி;

Update:2022-08-03 02:56 IST

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது 80). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வாகைகுளம் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது, நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சண்முக சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்