வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி;

Update: 2022-12-08 18:45 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் சக்கராஜா கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் ராஜா (வயது 80). இவர் சங்கரன்கோவில் சாலையில் உள்ள முதுகுடியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலையில் டீ குடிப்பதற்காக சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அர்ஜுன் ராஜா பலியானார். இதுகுறித்து அவரது மருமகன் ரவிச்சந்திரன் தெற்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்