கச்சிராயப்பாளையம் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி
கச்சிராயப்பாளையம் அருகே அரசு பஸ் மோதி முதியவர் உயிாிழந்தாா்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் சம்பத்(வயது 70). இவர் நேற்று மாலை கச்சிராயப்பாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கச்சிராயப்பாளையம் அடுத்த ஏர்வாய்ப்பட்டினம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயப்பாளையம் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சம்பத் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சம்பத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தைி வருகின்றனர்.