மோட்டார்சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

ஆரணி அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகன் மோதி இறந்தார்.;

Update: 2023-06-18 09:53 GMT

ஆரணி

ஆரணி அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகன் மோதி இறந்தார்.

ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் தவூத்தல (வயது 60). இவர் மினி வேன் டிரைவர். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஆரணிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

ஆரணி - வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் செல்லும்போது எதிரே அடையாளம் தெரியாத வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தவூத்தல உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இறந்த தவூத்தலரவிற்கு பிரியாரீப் என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் 2 மகன்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்