சரக்கு ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

சரக்கு ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-06 19:56 GMT

திருச்சி எல்.ஐ.சி. காலனி கலிங்கநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுப்பிரமணி, நேற்று காலை உடையான்பட்டி ரெயில்வே கேட் அருகே அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்