விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கள்ளிக்குடி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-05 20:11 GMT

கள்ளிக்குடி அருகேயுள்ள சோளம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. தனது அண்ணன் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த சில தினங்களாக இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனவிரக்தி அடைந்த காமராஜ் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்