விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-11 19:04 GMT

பெரம்பலூர் அருகே எளம்பலூர் 3-வது வார்டு, கே.கே. நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 65). இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அண்ணாதுரை நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அண்ணாதுரை, அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்