விஷம் குடித்து முதியவர் தற்கொலை
அரிமளம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
அரிமளம் அருகே உள்ள வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருளானந்த் (வயது 92). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அருளானந்த் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருளானந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.