திராவகம் குடித்து முதியவர் தற்கொலை
கருங்கல் அருகே திராவகம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே திராவகம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல் அருகே சடையங்குழி பொடுகல்விளை பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி (வயது 71). இவருடைய மனைவி சாந்தகுமாரி. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்து போனார். இந்நிலையில் அவரது முதலாமாண்டு நினைவு தினம் கடந்த 1-ந் தேதி வந்தது. இதன்பின்பு செல்லசாமி மிகுந்த சோகத்தில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் செல்லசாமி வீட்டில் இருந்த திராவகத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் செல்லசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மகன் பிரதீப் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.