விஷம் தின்று முதியவர் தற்கொலை
விஷம் தின்று முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
அன்னவாசல் அருகே பரம்பூர் முத்தம்பட்டி காலனியை சேர்ந்தவர் ராசு (வயது 60). இவருக்கு சர்க்கரை நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராசு மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று ராசு எலி பேஸ்ட்டை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் ராசுவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராசு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.