முதியவர் விஷம் குடித்து தற்கொலை

திருவட்டார் அருகேமுதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-04 17:56 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகேமுதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் விராலிக்காடு விளையை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (வயது71). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. மேலும் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால், வாழ்க்கையில் வெறுப்புற்ற ஜான்ரோஸ் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்