வல்லம்
தஞ்சையை அடுத்துள்ள வளம்பக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நல்லேந்திரன் (வயது60). இவரது தம்பி ரமேஷ் (52). இவர்கள் 2 பேரும் வளம்பக்குடி வடக்கு தெருவில் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்துள்ளது. நேற்றுமுன்தினம் நல்லேந்திரன், ரமேஷ் ஆகியோருக்கு இடையே சொத்து சம்பந்தமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நல்லேந்திரன், ரமேசை தாக்கினார். இது குறித்து ரமேசின் மனைவி ராணி (38) கொடுத்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நல்லேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.