கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு முதியவரின் உடல் தானம்

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு முதியவரின் உடல் தானம்

Update: 2023-05-20 18:45 GMT

கோவை

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 79). இவர் பாலசுப்பிரமணியா மில்லில் தொழிலாளியாக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவர் பணியாற்றிய மில்லில் ஏ.ஐ. டி.யு.சி. சங்கத்தை உருவாக்குவதில் முன்னிலை வகித்தார். வயது முதியர்வு காரணமாக இவர் மரணம் அடைந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது உடலை கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திாிரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவருடைய உறவினர்கள் ராமகிருஷ்ணனின் உடலை கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கினர். அவருடைய உடல் மருத்துவ கல்லூரி மாணவிகளின் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக டாக்டர்கள் தொிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்