முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-12 19:17 GMT

அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 74). இவர் தன்னுடைய வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி விளையாட வந்த போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கந்தசாமியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்