மூதாட்டி பலாத்காரம்; வாலிபர் கைது

மூதாட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-09 19:00 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியை அடுத்த பூதத்தான்குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் அசோக்குமார் (வயது 30). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் 70 வயதுடைய மூதாட்டி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் விசாரணை நடத்தி அசோக்குமாரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்