குளித்தலை அருகே உள்ள சிவாயம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சிவாயம் வாரிக்கரையில் மது விற்ற மேலபட்டியை சேர்ந்த வையாபுரி (வயது 70) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.