தூத்துக்குடி துறைமுகம் அருகே தரைதட்டி நிற்கும் எகிப்து கப்பல் - மீட்புப் பணிகள் தீவிரம்
இழுவை கப்பல்கள் மூலம் சரக்கு கப்பலை மீட்கும் பணியில் துறைமுக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தினந்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்களில் கொண்டு வரப்படும் சரக்குப் பெட்டிகள், நிலக்கரி, உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறுகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு எகிப்து நாட்டில் இருந்து சரக்கு கப்பல் ஒன்று சுமார் 55 ஆயிரம் டன் உரத்தை ஏற்றி வந்துள்ளது. இந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தின் நுழைவாயில் அருகே தரைதட்டி நிற்கிறது. இந்த கப்பலை இழுவை கப்பல்கள் மூலம் மீட்கும் பணியில் துறைமுக பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.