முட்டை விலை உயா்வால் பொதுமக்கள் கவலை
முட்டை விலை உயா்வால் பொதுமக்கள் கவலை
குண்டடம்
முட்டை என்பது ஏழைகளின் அசைவ உணவாக இருந்து வருகிறது. இதனால் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் வீடுகளில் முட்டையை உணவோடு சோ்த்து சாப்பிடுவது வழக்கம். தற்போது முட்டை விலை உயா்ந்துள்ளது. கடந்த ஏபரல் மாதம் ரூ.5-க்கு கடைகளில் விற்பனையாகி வந்த ஒரு முட்டை இன்று ரூ. 6.50-க்கு விற்பனையாகிறது.
இது குறித்து தாராபுரத்தை சோ்ந்த முட்டை வியாபாரி கூறும்போது " உற்பத்தி குறைவு காரணமாக தற்போது 5.50 ஆக உள்ளது. நாங்கள் சில்லரை வியாபாாிகளுக்கு ஒரு முட்டை ரூ. 5.80- க்கு விற்பனை செய்கிறோம். அவா்கள் அதனை தங்கள் கடைகளில் வைத்து ரூ. 6.50-க்கு விற்பனை செய்கின்றனா். ஓட்டல்களில் ஆம்லெட் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முட்டை விலை உயா்வை காரணம் காட்டி ஆம்லெட் விலையை உயா்வு செய்துவிடுவாா்களோ? என்ற அச்சத்தில் உள்ளனா் ஆம்லேட் பிரியர்கள். மேலும் முட்டை விலை உயா்வால் அதனை கொண்டு தயாாிக்கப்படும் கேக், துாித உணவுகள் போன்ற அனைத்தும் விலை உயரும் நிலை உள்ளது என்றார்.
------------