நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக சரிவடைந்து உள்ளது.
வடமாநிலங்களில் ஸ்ராவன் பண்டிகை தொடங்க இருப்பதால் பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை குறைந்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கறிக்கோழி கிலோ ரூ.93-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.82-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மண்டலத்தில் கடந்த 10 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 120 காசுகள் குறைந்து உள்ளதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.