கஞ்சா வழக்கில் தேடப்பட்ட வாலிபர் 1½ ஆண்டுக்கு பிறகு கைது

மார்த்தாண்டம் அருகே கஞ்சா வழக்கில் தேடப்பட்ட வாலிபர் 1½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-30 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே கஞ்சா வழக்கில் தேடப்பட்ட வாலிபர் 1½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

மார்த்தாண்டம் அருகே உள்ள இரவிபுதூர்கடை குருவிளைக்காட்டை சேர்ந்தவர் அபி (வயது 21). இவர் மீது கடந்த 2021 ஜூன் மாதம் மார்த்தாண்டம் போலீசார் ஒரு கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அபி தலைமறைவானார். இந்தநிலையில் அபி மார்த்தாண்டம் அருகே உள்ள தனது வீட்டுக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் போலீசார் வீட்டில் பதுங்கி இருந்த அபியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்். 1½ ஆண்டுக்கு பிறகு சிக்கிய அபியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் திருச்செந்தூர் பகுதியில் தலைமறைவாக இருந்து வேலை செய்து வந்ததாகவும், வீட்டில் இருந்து வெளியூருக்கு தப்பி செல்ல இருந்த நிலையில் போலீசார் கையில் சிக்கி கொண்டதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் அபியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்