மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
சாத்தான்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பிறந்த நாளையொட்டி சுப்பராயபுரம் நேருஜி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாத்தான்குளம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலரும், முதலூர் பஞ்சாயத்து தலைவருமான பொன்முருகேசன் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு புத்தகப்பை, பேனா மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார். தலைமை ஆசிரியர் வென்ஸி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அன்னகணேசன், கிளை செயலர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் சித்திரை செல்வம் நன்றி கூறினார்.