அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

கோவில்பட்டி அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Update: 2022-11-26 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் யாதுமானவள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். யாதுமானவள் திட்ட இயக்குனர் விஜயகுமாரி, மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா வரவேற்று பேசினார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பாபு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளிடையே யாதுமானவள் என்ற தலைப்பில் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவி டாக்டர் கமலா மாரியம்மாள் சார்பில் புரொஜெக்டர் வாங்குவதற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத்தின் சார்பில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான ஜெராக்ஸ் எந்திரமும், ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் நாராயணசாமி தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு ஷூ வாங்குவதற்கு ரூ.7,500/-ம் பள்ளி தலைமை ஆசிரியையிடம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் முத்துச்செல்வன், வெங்கடேஷ், சீனிவாசன், முத்து முருகன், மாரியப்பன், கிருஷ்ணசாமி, குணசேகரன், நாராயண சாமி, வீராச்சாமி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ரூத்ரத்னகுமாரி, சீனிவாசன், கண்ணன், இசை ஆசிரியை அமல புஷ்பம், தமிழ் ஆசிரியை கெங்கம்மாள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் மணிகண்டமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்